இந்தியா, ஜனவரி 29 -- Surya Bhagavan: நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற பிப்ரவரி மாதம் சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். சனி பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு இதன் மூ...