இந்தியா, பிப்ரவரி 22 -- இத்தாலியில் நடைபெற்று வரும் மிலன் ஃபேஷன் வீக்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா முழு கருப்பு நிற உடையில் தோன்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து பாலிவுட்டில் பிரபலம் ஆனார். இப்போது இவர் பிப்ரவரி 21ஆம் தேதி, உலகளாவிய பேஷன் அரங்கில் தோன்றி, கவனத்தை ஈர்த்து வருகிறார். இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பேஷன் ஷோவில் மிகவும் ஒரு நேர்த்தியான கருப்பு உடையில், கருப்பு ஷூ அணிந்து மிடுக்காக தோன்றினார். அப்போது எடுத்த படங்களை, இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்துகொண்டார்.

பிப்ரவரி 20 முதல் 26 வரை நடைபெறும் மிலன் ஃபேஷன் வீக் 2024 நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிலன் ஃபேஷன் வீக்கில் ராஷ்மிகா மந்தனா நீண்ட கருப்பு கோட்...