இந்தியா, ஜனவரி 26 -- Rashmika Mandanna:தற்போது இளைஞர்கள் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக அறியப்படும் ராஷ்மிகா மந்தனா, 2016 ஆம் ஆண்டு கன்னடப் படமான கிரிக் பார்ட்டி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதிலிருந்து ரஷ்மிகா மந்தனாவின் வாழ்க்கை மெல்ல மெல்ல மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதன்பிறகு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற பெரிய நடிகர்களுடனும், தமிழில் விஜய், தனுஷ், கார்த்தி போன்ற நடிகர்களுடனும் பாலிவுட்டில் ரன்வீர் கபூர், சல்மான் கானுடனும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஃபெமினா மீடியாவிடம் பேசிய ராஷ்மிகா தான் தன் கெரியரில் முன்னேற தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பதைப் பற்றிப் பேசினார்.

ராஷ்மிகா அந்தப் பேட்டியில், வெற்றிக்காக குடும்ப நேரத்தை தியாகம் செய்ய வேண்டியிருந...