இந்தியா, பிப்ரவரி 18 -- பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது விமானம் அவசரமாக தரையிறங்கியதாகக் கூறி ஒரு போட்டோவைப் பகிர்ந்துள்ளார். டெக்கான் க்ரோனிக்கலின் அறிக்கையின்படி, நடிகை பயணித்த விமானம் 'தொழில்நுட்ப கோளாறு' காரணமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

சனிக்கிழமை ராஷ்மிகா நடிகை ஷ்ரத்தா தாஸுடன் தான் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவு செய்திருந்தார். அதில் "இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று எழுதினார். டெக்கான் க்ரோனிக்கல் அறிக்கையின்படி, ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா மற்றும் பிற பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் விஸ்தாரா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பயணிகள் கடுமையான அச்சத்தில் உட்கார வேண்டியிருந்தது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது மும்பையில் இருந்து ஹைதராபாத...