இந்தியா, ஜனவரி 28 -- நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது காலில் காயமடைந்த நிலையில் படப்பிடிப்புகளில் இருந்து குட்டி பிரேக் எடுத்தார். தன்னால் முழுமையாக நடக்க முடியாதபோதிலும் காலில் காயத்துடன் கட்டு போட்டுக்கொண்டு வீல் சேரில் தனது புதிய படமா சாவா புரொமோஷனில் கலந்து கொண்டார். ராஷ்மிகாவின் இந்த அர்பணிப்பை ரசிகர்களை மட்டுமன்றி திரையுலகினரும் வியந்து பாராட்டினர்.

இதையடுத்து தனக்கு, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இடையிலான ரிலேஷன்ஷிப்பை உறுதிபடுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா. பிரபல ஊடகமான ஹாலிவுட் ரிப்போர்டருக்கு பேட்டியளித்தார் நடிகை ராஷ்மிகா. அப்போது, ஒரு ஆணிடம் தான் விரும்பு குணாதிசயங்கள் ப...