இந்தியா, மார்ச் 15 -- கன்னட நடிகை ரன்யா ராவ் தனது கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தங்க கடத்தல் வழக்கில் தான் குற்றமற்றவர் என்று அவர் கூறியுள்ளார். கடந்த வாரம், அவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து யு-டர்ன் அடித்துள்ளார்.

கூடுதல் இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு விமானத்திலிருந்தவாறே தான் கைது செய்யப்பட்டேன் எனவும், பலமுறை தாக்கப்பட்ட போதிலும், டிஆர்ஐ அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் கையெழுத்திட மறுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இருப்பினும், கடுமையான அழுத்தத்தின் கீழ், இறுதியில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளாராம். ரான்யா ராவ் எழுதியதாக கூறப்படும்...