இந்தியா, ஏப்ரல் 18 -- இந்தியாவை அடுத்த ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில், மொத்தம் 102 தொகுதிகளிக்கு வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது.

இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முடித்திருக்கும் நிலையில், தற்போது பிரபலங்களை டார்கெட் செய்து அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பது போல் பேக் விடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிப்பது போல் விடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த விடியோவுக்கு ஆமிர்கான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில், விடியோ பரப்பியவர்க...