இந்தியா, மே 24 -- Ramarajan: பிரபல நடிகரான ராமராஜன், ராஜ்கிரண் உடனான கருத்து மோதல் குறித்து, நக்கீரன் ஸ்டியோ சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரித்து, எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான்தான் அவருக்கு கால் சீட் கொடுத்து படம் தயாரிக்கச் சொன்னேன். அப்போதுதான் எனக்கு திருமணம் ஆகி இருந்தது. தயாரிப்பாளர் டி கே போஸ் தயாரிப்பில் ' என்னை விட்டு போகாதே' திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தேன். டி கே போஸூம் ராஜ்கிரணும் நண்பர்கள்.

இந்த நிலையில், டி கே போஸ் ஒருமுறை ராஜ்கிரணை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அவர் ராஜ்கிரண் சில படங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், நீ ஒரு படம் செய்து கொடு என்றும் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கு...