இந்தியா, ஏப்ரல் 3 -- ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள வெண்ணத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், சங்கத்தை மீண்டும் சிறப்பாக செயல்பட வைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கோரியும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெண்ணத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, P. சேதுராமன் தலைமையில் செயல்பட்டு வந்தது. வெண்ணத்தூர், நாரணமங்கலம், பாண்டமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளை உள்ளடக்கிய இச்சங்கம், வெண்ணத்தூர், பாப்பனேந்தல், பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், சம்பை, மேட்டுக்கொல்லை, பத்தனேந்தல், முத்து ரெகுநாதபுரம், நாரணமங்கலம், வைகை, திம்மாபட்டி, சிறுகுடி, வேலாங்குளம், எருமை...