Ramanathapuram,Virudhunagar,Madurai,ராமநாதபுரம்,விருதுநகர்,மதுரை, ஏப்ரல் 9 -- ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகுமார சேதுபதி ஆட்சியில், அவருடைய பாளையக்காரரான சாயல்குடி ஜமீந்தார், பிராமணருக்கு அக்கிரகாரம் ஏற்படுத்திக் கொடுத்த செப்புப்பட்டையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது பெற்றோரிடம் ஒரு பழமையான செப்புப்பட்டையம் இருப்பதாக சென்னையில் இருக்கும் ஆதித்யா சம்பத்குமார், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு கொடுத்த தகவலின் பேரில், கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் அருகிலுள்ள காந்தி நாடார், பாண்டீஸ்வரி இல்லத்தில் இருந்த பட்டையம் படித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: "600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அ...