இந்தியா, ஏப்ரல் 10 -- மருத்துவர் ராமதாஸின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக காடுவெட்டி குருவின் மருமகன் மஜோஜ் குற்றம்சாட்டி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியின் புதிய தலைமுறையினர் தனது தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்ற அன்பு கட்டளையை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதற்காக, கட்சி அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முடிவுக்கான காரணம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு "காரணங...