இந்தியா, ஏப்ரல் 12 -- என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என பாமக நிறுவனரும், தலைவருமான டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, தானே தலைவராகப் பொறுப்பேற்பதாக நேற்று அறிவித்தது கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்றிரவு தனது மகள்களிடமும் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரும், தற்போதைய தலைவருமான டாக்டர் ராமதாஸை சந்திக்க அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வருகை தந்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணியை நீக்கிவிட்டு, மீண்டும் தானே ...