இந்தியா, ஏப்ரல் 12 -- வரும் மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்க உள்ள நிலையில், டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தைலாபுர தோட்டத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழலில், ராமதாஸ் ஒரு அதிரடி முடிவை அறிவித்து கட்சியை உலுக்கி உள்ளார், அதேவேளையில் அன்புமணி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி எதிர்நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ராமதாஸ், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து, "இனிமேல் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் நான்தான். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்புமணிக்கு மட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ...