இந்தியா, ஜனவரி 29 -- Ramadoss: நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது என்றும் கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14,16ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலை எழுந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டிற்கான நிதிநலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14,16ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச...