இந்தியா, பிப்ரவரி 2 -- Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே போதும் அவரை கொண்டாட ஒரு கூட்டம் இருக்கும் சமயத்தில், அவரை ஒரு கூண் விழுந்த கிழவி திட்டித் தீர்ப்பதை கண்டால் அவரது ரசிகர்கள் கொதித்து விட மாட்டார்களா என்ன?. அப்படி நடக்கும் எனத் தெரிந்தே அருணாச்சலம் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் வடிவுக்கரசி. இதற்கு முன் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அருணாச்சலம் படம் அவர் நடிப்புக்கு மகுடம் சூட்டியது போன்று தான் அமைந்தது.

இந்நிலையில், அருணாசலம் படத்தில் நடித்தது எப்படி, அந்த வாய்ப்பு தன்னை தேடி வந்தது எப்படி, நடிக்கும் போது இருந்த மனநிலை என்ன என்பது குறித்து நடிகை வடிவுக்கரசி இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலில் நடிகர் ராஜேஷ் குமாருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பார்.

அந்தப் பேட்டியில், " நான் தூர்தர்ஷன...