இந்தியா, பிப்ரவரி 12 -- Rajinikanth: இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விவாதித்தார். அதில் நட்சத்திர நடிகர்கள் தேவர்களாக கருதப்படுவதால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கம்பெனி, சத்யா, சர்க்கார் போன்ற படங்களை இயக்கி பிரபலமாக அறியப்பட்டவர் ராம் கோபால் வர்மா. இவர் சமீபத்தில் பிங்க்வில்லாவிற்கு அளித்த பேட்டியில் ஒரு நடிகருக்கும் நட்சத்திரத்திற்கும் இடையிலான வித்தியாசம் குறித்து பேசியது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பேட்டியில் அவர் ரஜினிகாந்த் பற்றி பேசியது அவரது ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

ஒரு நட்சத்திரத்திற்கும் நடிகருக்கும் இடையிலான வேறுபாட்டைப் பற்...