இந்தியா, பிப்ரவரி 7 -- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் ஷுட்டிங்குக்கு இடையே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒய்எஸ்எஸ் ஆசிரமத்துக்கு விசிட் அடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அங்கு க்ரயா யோகா பயிற்சி மேற்கொண்டிருக்கும் அவர், அதன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இனி ஆண்டுதோறும் கிரயா யோகா பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

க்ரயா யோகா அனுபவம் தொடர்பாக வீடியோவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, "நான் ராஞ்சி ஒய்எஸ்எஸ் ஆசிரம்மதில் இருக்கிறேன். மூன்றாவது தடவை இங்கு வந்துள்ளேன். முதல் முறையாக 2002இல் வந்தேன். இரண்டாவதாக வரும்போது கூட இவ்வளவு விஷயங்களை பார்க்கவில்லை. இந்த முறை கடவுள் மற்றும் குருவின் அருளாள் இரண்டு நாள் கள் இங்கே இருந்து ஆஷரமம் முழுமையா பார்த்த நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைச்சது.

கு...