இந்தியா, பிப்ரவரி 27 -- Rajamouli: இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மீது அவரது பழைய நண்பர் சீனிவாச ராவ் என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதற்கு ராஜமௌலிதான் பொறுப்பு என்றும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணம் ஒரு காதல் என ராஜமெளலியின் நண்பர் சீனிவாச ராவ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அந்த வீடியோவில் சீனிவாச ராவ் தனக்கும் ராஜமௌலிக்கும் 34 வருட கால நட்பு இருந்ததாகக் கூறுகிறார். மேலும் தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் தன்னுடையது ஆர்யா 2 போன்ற முக்கோண காதல் கதை என்றும் சீனிவாச ராவ் கூறுகிறார். அப்போது அந்த பெண்ணை தனக்காக விட்டுக்கொடுக்குமாறு இயக்குநர் ராஜமௌலி கூறியிருக்கிறார். இது நடந்தது தெலுங்கில் 'சாந்தி நிவாசம்' சீரியலுக்கு முன்பு நடந்த ஒன்று என்று சீனிவா...