இந்தியா, மார்ச் 20 -- தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து வருபவர் எஸ்.எஸ். ராஜமெளலி. பாகுபலி சீரிஸ், ஆர்ஆர்ஆர் போன்ற பான் இந்திய படங்கள் மூலம் உலக சினிமா ரசிகர்களை திரும்ப பார்க்க வைத்த ராஜமெளலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள மிகவும் உயரமான சிகரமாக இருந்து தியோமாலியில் தனியாக ட்ரெக்கிங் சென்றிருக்கும் அவர், "குப்பைகளால் பாதைகள் நிரம்பியிருப்பதை பார்ப்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ராஜமெளலியின் டுவிட் பதிவுக்கு ஒடிசாவை சேர்ந்த சமூக-அரசியல் தலைவரான சுபர்ணோ சத்பதி பதில் அளித்துள்ளார்.

தான் ட்ரெக்கிங் சென்ற மலை உச்சியில் இருந்து எடுத்த வீடியோவை ராஜமெளளி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிற குப்ப...