இந்தியா, ஜனவரி 27 -- வடகிழக்கு பருவமழை முழுமையாக விலகிய நிலையில் வரும் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் ஜன.30ஆம் தேதி அன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக...