இந்தியா, ஜூலை 19 -- சென்னை, 19 ஜூலை 2025 - இந்தியாவின் ஆன்மீக மற்றும் பாரம்பரிய பொருட்களின் சில்லறை விற்பனையில் முன்னணி வகிக்கும் சில்லறை வணிக விற்பனையாளரான கிரி நிறுவனம், இந்திய சில்லறை சங்கம் (Retailers Association of India) வழங்கும் 'சிறந்த சிறப்பு சில்லறை விற்பனையாளர் 2025' என்ற பெருமை மிகுந்த விருதை பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு சென்னையின் அடையாளமான ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்திய சில்லறை வணிகத் துறையின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். சில்லறை வணிகத்தில்

கிரியின் மகத்தான பங்களிப்பு அதிலும் சிறப்பாக பாரம்பரியம் புதுமை மற்றும் வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்தும் பாங்கு, ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை இந்த விருது அங்கீகரித்துள்ளது.

கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான...