இந்தியா, ஜனவரி 28 -- ராகி மாவு - ஒரு கப்

(நிறம் மாறாமல் ஒரு நிமிடம் மட்டும் சிம்மில் வைத்து வறுத்துக்கொள்ளவேண்டும். ராகி மாவின் வாசம் வந்தால் போதும்)

தண்ணீர் - 2 கப் (தண்ணீர் அதிகம் சேர்க்கும்போது நீண்ட நேரம் ஆனாலும் கொழுக்கட்டை மிருதுவாக இருக்கும்)

நெய் - ஒரு ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - ஒன்றரை கப் (பொடித்தது, இதை அதிகம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்)

உப்பு - ஒரு சிட்டிகை (சுவையை அதிகரிக்கும். எந்த இனிப்புக்கும் ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்)

அடிக்கணமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். இதில் நெய்யை ஊற்றிக்கொள்ளவேண்டும். அடுத்து ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சே...