இந்தியா, பிப்ரவரி 13 -- தமிழில் கேழ்வரகு எனக் கூறப்படும் ஒரு வகை தானியம் தான் ராகி. இதனை வைத்து பல விதமான உணவுகள் தயாரிக்கலாம். இந்திய மருத்துவத்திலும், இயற்கை மருத்துவத்திலும் ராகியின் பலன்களை பற்றி கூறப்பட்டுள்ளது. உடல் எடை குறைப்பவர்களும் உணவில் ராகியை சேர்த்துக் கொள்வதை நம்மால் பார்க்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது உடையவர்களும் ராகியை சாப்பிடலாம். ஆனால் நமது வீடுகளில் கேழ்வரகு என்றாலே இதனை வைத்து கூழ், கஞ்சி போன்றவை தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதனை வைத்து புட்டு, இடியாப்பம், தோசை போன்ற பல வகையான உணவுகளை செய்து சாப்பிடலாம். உதிரி உதிரியாக ராகி இடியாப்பம் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

2 கப் கேழ்வரகு மாவு

2 கப் சூடான நீர்

1 டீஸ்பூன் நெய்

கால் டீஸ்பூன் உப்பு

அரை கப் பால்

3 டீஸ்பூன் சர்க்கரை

க...