இந்தியா, மார்ச் 17 -- Pushpa 3 Movie Update: தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் புஷ்பா தி ரைஸ், புஷ்பா தி ரூல். தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளரான ரவி சங்கர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: புஷ்பா படத்தால் மாணவர்கள் மோசமாகிவிட்டனர்.. வருந்தும் ஆசிரியை

நிதின்- ஸ்ரீலீலா நடிப்பில் உறுவாகியுள்ள ராபீன்ஹுட் திரைப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவி சங்கர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புஷ்பா 3 படத்தின் அப்டேட்டை வழங்கியுள்ளார்.

அப்போது, புஷ்பா 2 படத்தை முடித்துள்ள அல்லு அர்ஜூன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதாக கூறியுள்ள...