இந்தியா, பிப்ரவரி 5 -- Pushpa 2 OTT: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம், வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், ஓடிடியிலும் சக்கை போடு போட்டு வருகிறது. சுக்குமார் இயக்கத்தில் உருவான இந்த ஆக்‌ஷன் திரைப்படம், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று, பல சாதனைகளைப் படைத்தது. இப்போது ஓடிடியிலும் புஷ்பா 2 சாதனை புரிந்து வருகிறது. ஹாலிவுட் ரசிகர்களும் பாராட்டுகளால் மழை பொழிந்து வருகின்றனர்.

புஷ்பா 2 திரைப்படம் ஜனவரி 30ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸில் முதலிடத்தில் உள்ள இந்தப் படம், உலக அளவில் டாப்-10 இல் இடம்பிடித்துள்ளது. இதனால், ஆங்கில சப்டைட்டிலுடன் இந்தப் படத்தைப் பல ஹாலிவுட...