இந்தியா, ஏப்ரல் 7 -- Pushpa 2 Movie On Tv: புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் இனி டிவியில் தனது ஆதிக்கத்தை காட்ட தயாராகி வருகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. ஓடிடியிலும் சாதனை படைத்தது. இப்போது டிவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் படிக்க| முதலில் பயமாக இருந்தது.. சேலை கட்டினாலும் கம்பீரம் தேவை.. புஷ்பா 2 குறித்து அல்லு அர்ஜூன்..

மூன்று மொழிகளில் ஒரே நாளில் புஷ்பா 2 டிவி பிரீமியர் நடக்க உள்ளது. ஒரு மொழியில் மட்டும் ஒரு நாள் தாமதமாக ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், டிவியில் படம் வெளியாகும் தேதி, நேரம், சேனல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஏப்ரல் 13 அன்று வெவ்வேறு சேனல்களில் டிவி பிரீமியர் ஆக உள்ளது. தமிழில் ஒரு நாள் தாமதமாக ஒளிபர...