இந்தியா, பிப்ரவரி 9 -- Pushpa 2: புஷ்பா 2: தி ரூல் படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், புஷ்பா படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும், புஷ்பா: தி ரைஸ் மற்றும் புஷ்பா 2: தி ரூல் படங்களில் மங்களம் சீனு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த சுனில், புஷ்பா படத்தால் தான் அடைந்த பெருமைகல் குறித்தும் பேசினார். அந்த விழாவில் பேசிய சுனில், ஸ்பெயின் நாட்டில் பாகிஸ்தானியர்களால் அவர் எவ்வாறு அடையாளம் காணப்பட்டார் என்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய சுனில், "நான் ஆதிக் ரவீச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் ஸ்பெயின் நாட்ட...