இந்தியா, பிப்ரவரி 2 -- ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே நமது வீடுகளில் அசைவ உணவுகள் என மணம் கமகமக்கும். ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே நமது குடும்பங்களில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நமது வீடுகளில் வழக்கமாக செய்யப்படும் அதே உணவுகளை சாப்பிட்டு சிலருக்கு சலித்து போகி இருக்கலாம். எனவே வித்தியாசமான வகையில் அசைவ உணவுகளை செய்து தரும்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தமிழ் நாட்டில் பெரும்பாலும் குழம்பு வகைகள், பிரியாணி வகைகள் தான் வழக்காம செய்யப்படும் உணவு வகைகள். வேற்று மாநிலங்களின் உணவு முறைகளும் மிகவும் ருசியானதாக இருக்கும். இந்தியாவின் பல இடங்களில் சிக்கனை வைத்து விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று பஞ்சாபி சிக்கன் கிரேவி செய்வது குறித்து இங்கு காணலாம்....