இந்தியா, பிப்ரவரி 2 -- வீட்டில் சமைப்பதற்கு நேரம் இல்லையென்றால் உடனடியாக ஏதேனும் இன்ஸ்டண்ட் உணவுகளை சமைத்து கொடுப்போம். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகள் என நாம் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ், பாஸ்தா போன்றவைகளை தினமும் சாப்பிட முடியாது. இந்த உணவுகளை மதிய உணவிற்கும் கொடுத்து விட முடியாது. இந்த மாதிரி சமயங்களில் மிக்ஸிங் செய்து சாப்பிட தொக்கு, ரெடிமேட் குழம்பு வகைகள் ஏதேனும் இருந்தால் உதவியாக இருக்கும். ஆனால் கடைகளில் வாங்கும் ரெடிமேட் உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படாமல் இருக்கலாம். எனவே வீட்டிலேயே நாம் இது போன்ற உணவுகளை தயாரித்து வைத்து பயன்படுத்தலாம். நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகமால் இருக்கும் புளியதோரை மசாலா! இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இதனை எளிமையாக உங்கள் வீடுகளிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளை இந்த தொகுப்பை முழுமையாக படியுங...