இந்தியா, நவம்பர் 30 -- புதுச்சேரி: உலக புகழ்பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென இன்று மரணமடைந்தது.

மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பல்லாயிரம் பக்தர்களின் பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட லட்சுமி யானை விடியற்காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தது.

அதிர்ச்சியடைந்த பாகன் யானையைப் பரிசோதித்தபோது தனது பாசத்துக்குரிய லட்சுமி யானை அதே இடத்தில் தனது உயிர் பிரிந்து விட்டது தெரிந்ததும் பெரிதும் வேதனைக்கு ஆளானார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை அருள்மிகு மணக்குள விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அன்றுமுதல் இன்று வரை புதுச்சேரி மக்களிடம் பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடிய லட்சுமி யானை திட...