இந்தியா, மார்ச் 8 -- புதுச்சேரியில் மரபுச் சுற்றுலாவில் நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்களாக திருச்சி கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பார்த்திபன் கூறியவை எவை என்று தெரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்த பார்த்திபன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது -

புதுச்சேரி மரபு சுற்றுலாவில் நாம் நேற்று திருவக்கரை, கிளியூர் அகஸ்தீஸ்வரர் கோயில் மற்றும் கேன்யான் ஆகிய இடங்கள் குறித்து பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கவுள்ள இடம். மரக்காணத்தில் உள்ள சிவன் கோயில்.

ராஜாராஜாசோழன் காலத்தில் கட்டப்பட்டது. அவருக்கு பின்னர் வந்த மன்னர்களின் கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கோளில் எயிர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த எயிர் என்றால், எயினர்கள் இருந்த பகுதியாகக் கருதப்படுகிறது. எயினர்கள் என்ற பிரிவினர் இருந்த பக...