இந்தியா, மார்ச் 7 -- இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யப்படும் உணவுகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பல வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்து பல விதமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கின்றனர். அந்தந்த நாடுகளிலும் இந்திய உணவுகளுக்கான உணவகங்கள் இருந்து வருகின்றன. அந்த அளவிற்கு வெளிநாட்டவர்களுக்கு இந்திய உணவுகள் மீது அதிக நாட்டம் வந்து விடுகிறது. இந்த வரிசையில் இந்திய இனிப்பு உணவுகள் முதன்மையான இடத்தில் உள்ளன எனக் கூறலாம். இந்தியாவில் செய்யப்படும் உணவுகள் அனைத்து பகுதிகளிலும் ஓரளவிற்கு ஒத்த சுவையையும், ஒரே மாதிரியான செய்முறையையும் கொண்டுள்ளன. அதில் இனிப்பு உணவு என்றால் அதில் சில முறைகள் மட்டும் மாறுகின்றன. இந்த வரிசையில் இன்று நாம் புதுச்சேரி தேங்காய் பாயாசம் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கப்ப...