இந்தியா, பிப்ரவரி 23 -- புதுச்சேரி இறால் சாதம், பாண்டி ப்ரான் ரைஸ் இதை நீங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் வைத்துக்கொடுத்தீர்கள் என்றால் தினமும் மிச்சம் வைக்கும் குழந்தைகள் கூட மொத்தமாக காலி செய்து விடுவார்கள். இதை உங்கள் குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் நண்பர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் சுற்றுலா செல்லும்போதும் செய்து எடுத்துக்கொண்டு செல்லலாம்.

* இறால் - கால் கிலோ

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 10 பல்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* மிளகு - அரை ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2 (கீறியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* முட்டை - 2 (அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* வடித்த ச...