இந்தியா, மார்ச் 7 -- சமைத்து உண்ணும் உணவுகளைவிட சமைக்காமல் நாம் சில உணவுகளை நேரடியாக சாப்பிட முடியும். அதில் பழ சாலட் மற்றும் காய்கறிகள் கொண்ட சாலட் மிகவும் முக்கியமானது. இதை குறிப்பாக டயட் கடைபிடிப்பவர்கள், உடற்பயிற்சிகள் செய்பவர்கள் மற்றும் உடல் எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்த வகையிலான ஒரு சாலட் ரெசிபிதான், இந்த லெட்யூஸ் சாலட். இதை இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்து சாப்பிட்டால் நிச்சயம் உங்கள் நாவுக்கு விருந்து என்று கூறலாம். இது அத்தனை சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

* லெட்யூஸ் - 12 (கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* வெள்ளரி - 1 (பொடியாக நறுக்கியது)

* சிவப்பு குடை மிளகாய் - அரை (பொடியாக நறுக...