இந்தியா, மார்ச் 7 -- புதுச்சேரி ஒரு கடற்கரை நகரம் என்பதால் அங்கு கடல் உணவுகள் பிரபலம் மீன், நண்டு, இறால் என எப்போதும் கடல் உணவுகள் களைகட்டும். அங்கு செய்யப்படும் நண்டு மசாலா மிகவும் சுவையானதாக இருக்கும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். நண்டு சாப்பிடுவது சிலருக்கு கடினமாக இருக்கும். ஆனால் இந்த புதுச்சேரி நண்டு மசாலாவை நீங்கள் ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் வீட்டிலேயும் இதைச் செய்யலாம் அல்லது அங்கு சுற்றுலா செல்லும்போது மறக்காமல் வாங்கி சாப்பிடவேண்டிய உணவுகள் பட்டியலில் இந்த நண்டு மசாலாவை வைத்துக்கொள்ளுங்கள்.

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* பூண்டு - 6 பற்கள்

* இஞ்சி - ஒரு இன்ச்

* மல்லி விதைகள் - 2 ஸ்பூன்

* மிளகு - 2 ஸ்பூன்

* வர மிளகாய் - 8

(ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் பூண்டு, இஞ்சி, ம...