இந்தியா, பிப்ரவரி 24 -- சென்னையில் இருந்து சில மணி நேரங்களில் அடையக்கூடிய புதுச்சேரியில் நீங்கள் 2 நாட்கள் என்னவெல்லாம் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளும் வகையில் நேற்று முதல் நாள் என்ன பார்க்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம். செரினிட்டி, ராக், ஆரோவில் பீச்கள், அரவிந்தர் ஆசிரமம் என நீங்கள் முதல் நாளில் பார்த்துவிட்டு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து அடுத்த நாள் பயணத்துக்கு தயாரானால், இரண்டாம் நாளில் நீங்கள் முதலில் செல்ல வேண்டிய இடமாக வார் மெமோரியல் எனப்படும் போர் நினைவிடம் இருக்கும்.

முதலாம் உலகப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகக் கட்டப்பட்டதுதான் இந்த வார் மெமோரியல் 1971ம் ஆண்டு இது கட்டப்பட்டது. ராக் பீச்க்கு அருகில் காந்தி சிலைக்கு எதிரில் இது உள்ளது. இங்கும் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டும். இந்த இடத்தில் நீங்கள் ஒரு மணி நேரம் செலவிட...