இந்தியா, பிப்ரவரி 23 -- உங்களுக்கு கடற்கரை பிடிக்கும் என்றால் புதுச்சேரியை கட்டாயம் பிடிக்கும். புதுச்சேரி சென்னையில் இருந்து சில மணி நேர பயணத்தில் அடைந்துவிடலாம். இங்கு நவம்பர் முதல் மார்ச் வரையில் செல்ல ஏற்ற காலம். வங்காள விரிகுடாவின் கடற்கரை ஆண்டு முழுவதுமே அழகாகத்தான் இருக்கும். இங்கு இரண்டு நாட்கள் நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அதில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னவென இங்கு பார்க்கலாம்.

புதுச்சேரி செல்லும் வழியில் ஆரோவில் பீச் உள்ளது. இது நீங்கள் புதுச்சேரிக்குள் நுழையும் முன்னரே உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். இங்கு நீங்கள் இதமான புத்துணர்வுள்ள காற்றை சுவாசிக்கலாம். உப்பு மண் நிறைந்து, உங்கள் பயணத்தில் சிறு ப்ரேக் எடுக்க உதவும். இங்கு நீங்கள் ஒரு மணி நேரம் தங்கி விளையாடி மகிழலாம்.

இது புதுச்சேரியின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது...