இந்தியா, செப்டம்பர் 24 -- தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், " திமுகவினர் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கேள்விப்பட்டேன். நான் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நீட் தேர்வு எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய தேர்வாக உள்ளது. இதை அவர்கள் எதிர்க்க காரணம் திமுகவில் படித்த தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கல்வியை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் நீட் தேர்வை எதிர்கிறார்கள்.

நீங்கள் எதுவும் படிக்காமல் இருந்துவிட்டு, கல்வியை பற்றி பேசினால் இப்படித்தான் கருத்துக்களை தெரிவிப்பீர்கள். நீட் தேர்வு காரணமாக கிராமத்தில் உள்ள மக்கள் கல்வியை பெற முடிகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் ...