இந்தியா, மார்ச் 6 -- ஐரோப்பிய டாப் டிவிஷன் கால்பந்து கிளப்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் தொடராக UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் உள்ளது. இதையடுத்து சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று முதல் லெக்கில், பிஎஸ்ஜிக்கு (பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன்) எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தாமதமாக மாற்று வீரராக களமிறங்கிய போதிலும், ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார் ஹார்வி எலியட். பிஎஸ்ஜி அணிக்கு எதிரான தொடர் தாக்குதல்களில் இருந்து தப்பித்தது லிவர்பூல் அணி. ஆட்டம் இறுதி கட்டத்துக்கு செல்லும் போது இரு அணிகலும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என சமநிலையில் இருந்தன.

ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் முகமது சாலாவுக்குப் பதிலாக எலியட் அனுப்பப்பட்டார். களமிறங்கியவுடன் ஆட்டத்தின் முதல் டச்சி...