இந்தியா, பிப்ரவரி 11 -- Promise Day 2025 : உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் உற்சாகத்துடனும், பரபரப்புடனும், மகிழ்ச்சியுடனும் காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ரோஜாக்கள் தினத்தில் ஆரம்பித்த காதலர் வாரமும் இன்று 11ம் தேதி ப்ராமிஸ் அதாவது உறுதியளிப்பு தினத்தில் வந்து நிற்கிறது. இந்த நேரத்தில்தான் காதலர்கள் அவர்களின் ஆழமான அன்பை வெளிப்படுத்திக்கொள்ள முடியும். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பற்றை நிரூபிக்கும் வகையில் அவர்கள் பரிசுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கிரஷ்களை துரத்திக்கொண்டிருக்கும் சிங்கிள்களுக்குத்தான் இது கொண்டாட்டமான காலம் எனலாம். அவர்களின் கிரஷ்களிடம் தங்கள் காதலை சொல்லும் வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். முரட்டு சிங்கிள்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்கள். இந்த காதலர் வார...