இந்தியா, பிப்ரவரி 4 -- Priyanka Chopra: கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டை கலக்கி வந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸை சந்திக்கும் முன் தனக்கு துணையாக வருபவரிடம் தான் தேடிய குணங்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பேசினார். மேலும், அவர் தனது காதலனைத் தேடிய பயணம் குறித்தும் பேசினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் நிக் ஜோனாஸுடன் டேட்டிங் செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கிய நேரத்தைப் பற்றி பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஹார்பர்ஸ் பஜாருடனான ஒரு புதிய நேர்காணலில் பிரியங்கா சோப்ரா இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது, அவர் ஒரு குடும்பத்தை விரும்பும் ஒருவருடன் இருக்க விரும்புவதாகக் கூறினார்.

மேலும் அந்தப் பேட்டியில், " நான் விர...