இந்தியா, ஏப்ரல் 5 -- Prithviraj Sukumaran: கேரள சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிருத்விராஜ் சுகுமாரன். இவர் மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

மேலும் படிக்க: எம்புரான் படத் தயாரிப்பாளர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. தமிழகம், கேரளாவில் பரபரப்பு..

இந்நிலையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதி லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக எல்2 எம்புரான் படத்தை வெளியிட்டார். இந்தப் படம் வெளியான நாளில் இருந்தே பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று அமலாக்கத்துறையினர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபலனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று எம்புரான் படத்தின் இயக்குநரான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பிய...