இந்தியா, மார்ச் 27 -- மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டுவெளிவந்த லூசிஃபர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

அவர்களின் ஆசைக்கிணங்க, லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் 'L2 எம்புரான்' என்ற பெயரில் உருவானது. முதல் பாகம் பெரிய வெற்றியடையடைந்த காரணத்தால், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்தப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் மோகன்லால் ரசிகர்களுடன் படத்தின் முதல் காட்சியைப் பார்க்க கேரளாவில் உள்ள திரையரங்கிற்கு மனைவியுடன் வந்தார்.

மேலும் படிக்க | Mohanlal: 'முகமது குட்டி பெயரில் நீராஞ்சனம் பண்ணுங்க..' நண்பன் மம்முட்டிக்காக சபரிமலை ஏறிய மோகன்...