இந்தியா, ஜனவரி 31 -- "உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்" என பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறி உள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம், சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தோம். அனைத்து இந்தியர்களின் சார்பாக, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு குழுவில் உள்ள அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட ந...