இந்தியா, பிப்ரவரி 11 -- திருச்சியைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசாஈசன் கூறிய தகவல்கள்

குழந்தை பிறந்த பின் உடல் எடை அதிகரித்துவிடுவதாக சில பெண்கள் வருந்துகிறார்கள். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் உடல் எடை கூடுவது இயல்பான ஒன்று தான். இதற்காக தனி மருந்து எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுக பிரசவம் நடந்த பெண்களுக்கு, பாலூட்டுவதை நிறுத்திய பிறகு, உடல் எடை தானாகவே குறைந்து விடும். ஆனால் நீங்கள் பாலூட்டும் தாய்மாராக இருக்கும்போது, நீங்கள் கீழ்கண்ட மருந்தை எடுத்துக்கொண்டால், அது உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அது என்னவென்று பார்க்கலாம்.

சுக்கு - 50கிராம்

மிளகு - 50 கிராம்

அரிசித்திப்பிலி - 25 கிராம்

கண்டந்திப்பிலி - 50 கிராம்

ஏலம் - 10 கிராம்

கிராம்பு - 10 கிராம்

அத்திப்பட்டை - 5...