இந்தியா, பிப்ரவரி 11 -- தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகம் செய்து வருகிறது. தவெக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு மாவட்டம் தோறும் கட்சி பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் என்ற அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் நேற்றைய தினம் சென்னை வந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவககத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பை தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆ...