இந்தியா, பிப்ரவரி 10 -- சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் உடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பை தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளாரான ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்து உள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகம் செய்து வருகிறது. தவெக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு மாவட்டம் தோறும் கட்சி பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: விரைவில் கைதாகிறாரா நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்? போட்டு உடைத்த அமைச்சர் ரகுபதி!

இந்த நிலையில் தவெக தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி வருகிறார். தற்போதைய அரசியல் நிலவரம், தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வ...