இந்தியா, பிப்ரவரி 2 -- Prakash Raj: பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில், நடிகர் பிரகாஷ் ராஜ் குளிப்பது போன்ற செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் வைரலானது. ஆனால் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்து கொள்ளவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

இதையடுத்து, தற்போது பிரகாஷ் ராஜ் தனது போலி படத்தை பரப்பியவர்கள் மீது மைசூருவில் உள்ள லட்சுமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் தான் கும்பமேளாவில் குளிப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை முதலில் பரப்பிய பிரசாந்த் சாம்பார்கி மீது புகாரளித்ததின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிரகாஷ் ராஜ், "பிரசாந்த் சம்பந்தி பிரபலமானவரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துகிறார்கள். அவர்கள் எனக்கு எதிராக பல விஷய...