இந்தியா, ஜனவரி 30 -- தென் இந்திய சினிமாக்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அரசியல் குறித்து தொடர்ந்து கருத்துகளையும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வரும் பிரகாஷ் ராஜ், தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிராயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடலில் ஈடுபட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தங்களில் வைரலானது.

இதையடுத்து நாத்திகவாதியாக தன்னை வெளிப்படுத்தி கொள்ளும் நடிகர் பிரகாஷ் ராஜ், கும்பளமேள சென்று புனித நீராடலில் ஈடுபட்டுள்ளதாக பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அத்துடன் இந்த புகைப்பட்ததை வைத்து பலரும் பிரகாஷ் ராஜுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு, கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு மீம்களும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வைரல் புகைப்படம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ்...