இந்தியா, மார்ச் 19 -- Pradosham festival: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமது இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிவபெருமானுக்குரிய எத்தனையோ சிறப்பு மிகுந்த நாட்கள் வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் மன்னர்களால் கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வானுயர்ந்து கம்பீரமாக காணப்படுகின்றன.

சிவபெருமானுக்கு உரிய சிறப்பு மிகுந்த நாள்கள் வெகு விமர்சையாக கோயில்களில் கொண்டாடப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட திருநாளில் பிரதோஷம் மிகவும் முக்கிய திறனாக கர...